செய்திகள்

தீபாவளி தொடர் விடுமுறை: விமான டிக்கெட் கட்டணம் 4 மடங்கு உயர்வு!

தீபாவளி தொடர் விடுமுறை: விமான டிக்கெட் கட்டணம் 4 மடங்கு உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

சென்னை – மதுரை வழித்தடத்தில் வழக்கமாக ரூ.4,730 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.16,700 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – திருச்சி வழித்தடத்தில் ரூ.4,640 ஆக இருந்த கட்டணம் ரூ.14,683 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை – கோவை வழித்தடத்திலும் விமானக் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.4,180 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.14,607 ஆக அதிகரித்துள்ளது.

தீபாவளி தொடர் விடுமுறையைப் பயன்படுத்தி பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால் விமானப் பயணத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் இருக்கைகள் விரைவாக முன்பதிவு செய்யப்பட்டு, மீதமுள்ள இருக்கைகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கு இந்தக் கட்டண உயர்வு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.