VCK-வின் நிலைபாட்டால் திறக்கப்படாத அம்பேத்கர் சிலை!|Kallakurichi
விசிக – தவெக கூட்டணி அமைந்துள்ள நிலையில் இதன் காரணமாக பல நாட்களாக கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை திறக்கப்படாமல் உள்ளது
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பழமையான அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலை சேதமடைந்து உள்ளதால் அந்த சிலையை மாற்றி புதிய அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கடந்த திமுக ஆட்சியின் போது கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்எல்ஏ புதிய வெங்கல சிலையை தன்னுடைய சொந்த செலவில் அமைக்க ஏற்பாடு செய்தார்.
ஆனால் திமுக – விசிக கூட்டணி சார்பில் அம்பேத்கர் சிலை புதிதாக மாற்றி அமைத்தால் மற்ற கட்சி நிர்வாகிகள் அதற்கு மாலை அணிவிக்க ஏதுவாக இருக்காது என மற்ற கட்சிகள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பழைய அம்பேத்கர் சிலை அருகே புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் விசிக அரசியல் நிலைப்பாடு காரணமாக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் தற்போது விசிக அரசியல் மாற்றத்தால் அம்பேத்கர் சிலை திறக்கப்படாமல் உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பழைய சிலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மூடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது விசிக நிர்வாகிகள் நாம் திமுகவுடன் கூட்டணி இருந்த போது இந்த சிலையை அமைக்க ஏற்பாடு செய்தோம், தற்போது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளதாலும், திமுக எம்எல்ஏவின் சொந்த செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதால் திறப்பதில் பிரச்சனை குழப்பம் உள்ளதாக திருமாவிடம் தெரிவித்தனர்.

திருமாவளவன் அப்பகுதிக்கு அம்பேத்கர் சிலை மாலை அணிவித்து சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

