“இன்று இந்த 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னைக்கும் மழை எச்சரிக்கை!”
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தமிழக மழைக்கு முக்கிய காரணம் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. இது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், இந்த அமைப்பு அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுக்கும் வாய்ப்பு உள்ளது.

