“முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா?” – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து 116 நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் விமர்சித்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய்க்குத் தெரியுமா? தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாரா? எனக் கேள்வி எழுப்பிய உதயநிதி, 116 நாட்களாக முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா என்றும் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேபோல், துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான புகார் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள் :
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!
