ஊடகங்களில் பேசுவதற்கு தடையா? அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் முக்கிய உத்தரவு!
அதிமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையின் அனுமதியின்றி பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கொள்கைகள், நிலைப்பாடுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகிகள் தனிப்பட்ட கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைப் பகிரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்க தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஒற்றுமை மற்றும் கட்டுப்பாட்டைக் காக்கும் வகையில் இந்த அறிவுறுத்தலை அனைத்து நிர்வாகிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
