செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தடை உத்தரவை எதிர்த்து அவசர வழக்கு – இன்று விசாரிக்கும் உயர் நீதிமன்றம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தடை உத்தரவை எதிர்த்து அவசர வழக்கு – இன்று விசாரிக்கும் உயர் நீதிமன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள 163 BNSS தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நவம்பர் 24-ஆம் தேதியான இன்று ஒருமுறை அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, கோயில் நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்திருந்தது.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது. மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே மனுதாரர்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால் இன்றைய நீதிமன்ற விசாரணை பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.