சென்னையில் இன்று மின்தடை: இந்த பகுதிகளில் கரன்ட் இருக்காது! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று, செப்டம்பர் 24ஆம் தேதி, பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதன்படி, காலை 9 மணி முதல் ராயப்பேட்டை, திருமுல்லைவாயல், ஆதம்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம், முடிச்சூர், சேலையூர், அடையாறு மற்றும் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் மின்தடை இருக்கிறதா என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
