விடுமுறை முடிந்தது.. நாளை முதல் தமிழக பள்ளிகள் மீண்டும் திறப்பு! மாணவர்களுக்கு முக்கிய தகவல்
தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிவடைந்த நிலையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை (அக்.5) மீண்டும் திறக்கப்பட உள்ளன. காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17 முதல் 25 வரை நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக 1 முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
மேலும், காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுடன், அவர்களின் மதிப்பெண்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, 2026-27 கல்வியாண்டுக்கான காலண்டரின்படி, அடுத்த முக்கிய விடுமுறைகளில் அக்.19 ஆயுத பூஜை மற்றும் அக்.20 விஜயதசமி ஆகியவை இடம்பெறுகின்றன.
இதனால், நீண்ட விடுமுறைக்குப் பிறகு நாளை மீண்டும் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
