செய்திகள்

சென்னையில் அரசு நிறுவனத்தில் 108 அப்ரண்டிஸ் வாய்ப்பு.. மாதம் ரூ.12,300 வரை ஊக்கத்தொகை!

சென்னையில் அரசு நிறுவனத்தில் 108 அப்ரண்டிஸ் வாய்ப்பு.. மாதம் ரூ.12,300 வரை ஊக்கத்தொகை!

சென்னையில் அரசு நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் (CMWSSB) மொத்தம் 108 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 76 Graduate Apprentice பணியிடங்களும், 32 Technician Apprentice பணியிடங்களும் உள்ளன. Civil, Mechanical, Electrical and Electronics Engineering உள்ளிட்ட பிரிவுகளில் படித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Graduate Apprentice பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,300 ஊக்கத்தொகையும், Technician Apprentice பயிற்சிக்கு ரூ.10,900 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட Engineering Degree அல்லது Diploma படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்வு எழுத்துத் தேர்வு மூலம் இல்லாமல், கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் NATS (National Apprenticeship Training Scheme) இணையதளத்தில் பதிவு செய்து, Chennai Metropolitan Water Supply and Sewerage Board நிறுவனத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 17, 2026

எனவே, சென்னையில் அரசு நிறுவனத்தில் தொழில்துறை அனுபவம் பெற விரும்பும் Engineering மற்றும் Diploma முடித்தவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *