10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு? மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் 2027-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர்வு அட்டவணையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 2027-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (அக்டோபர் 14) வெளியிட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) மூலம் தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு பாடத்திற்குமான தேர்வு தேதி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெறும். 11-ம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?
2027-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அட்டவணையில் இடம்பெறும்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் 2027 மார்ச் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப தேர்வு தேதிகள் மற்றும் செய்முறைத் தேர்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு அட்டவணையை எங்கே பார்ப்பது?
மாணவர்கள் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in என்ற தளத்தில் தேர்வு அட்டவணை வெளியானதும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு அட்டவணை வெளியான பிறகு, மாணவர்கள் பாடவாரியாகத் தங்களின் படிப்புத் திட்டத்தை அமைத்து தயாராகலாம். இருப்பினும், தேர்வு தேதிகள் தொடர்பான இறுதி உறுதிப்படுத்தலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பையே பின்பற்ற வேண்டும்.
