செய்திகள்

ஒருபுறம் Pink ஆட்டோ.. மறுபுறம் வெற்றி பயணம்.. – உழைக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு சவாலா..?

தமிழ்நாடு அரசு சமீபத்தில் கட்டணமில்லா பேருந்தை விரிவாக்கம் செய்த நிலையில் அது மகளிருக்கு ஏற்படுத்தி இருக்கும் பிரச்னைகள் குறித்து விரிவாக அலசுவோம்

சக்கரத்தின் கண்டுபிடிப்பு என்பது விஞ்ஞான உலகத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. அதுதான் விஞ்ஞானத்தின் மிகப்பெரிய தொடக்கப் புள்ளியாக அமைந்ததாகவும், அதற்கு பின்பு விஞ்ஞான உலகம் வேகமெடுத்தது எனவும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. சக்கரம் என்பது இயங்குதலை அடிப்படையாக கொண்டது. இயங்கும்போதுதான் முன்னேற்றம் உருவாகும். சமூகம், குடும்பம், தொழில், அறிவியல், விஞ்ஞானம் என நாம் எதைத் தொட்டு பேசினாலும் இயங்குதலில் வளர்ச்சி என்பது உள்ளது.

இந்தியா போன்ற ஒரு பன்முக கலாச்சார பண்பாடு மிக்க ஒரு நாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது தனித்த அடையாளங்களோடு முன்னேற்றம் அடைகிறது. தமிழகத்தின் வளர்ச்சி நாடு முழுவதும் கவனிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது எனில் அதற்கு சமூக நலத் திட்டங்கள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கட்டணமில்லா மகளிர் பயணம்

பெண்களின் இயங்குதலை உறுதிப்படுத்தும் சமூக கண்ணோட்ட நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம். பெண்கள் ஓரிடத்தில் நகர்ந்து இன்னொரு இடத்திற்கு செல்வதின் வழியாக சமூக முன்னற்றமும் மற்றும் பெண்களின் வளர்ச்சி, Exposure அதிகரிக்கிறது. அவர்கள் சுயமாக தங்களை தாங்களே இயங்குதலுக்கு உட்படுத்த அவை உறுதுணையாக இருக்கும். இந்த சமூக கண்ணோட்டங்களை முன்வைத்துத்தான் கட்டணமில்லா பேருந்து திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதேநேரத்தில் இந்தியச் சமூகத்தில் ஆண், பெண் இருவருக்குமான சமமான ஊதியம் என்பது எட்டாக் கனியாக உள்ளது. கார்ப்பரேட் மற்றும் ஐடி நிறுவனங்களை தவிர்த்த் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கான ஊதியத்தில் என்பது மிகப்பெரிய வித்தியாசம் கடைபிடிக்கப்படுகிறது. அதேபோல சிறுதொழில் செய்வதில் அதிகளவு பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தில் பேருந்துக்கான செலவை அரசே ஏற்கும் விதமாகத்தான சமூக நலத் திட்டமாக கட்டணமில்லா பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனையும் படியுங்கள் : வெற்றி கொடுத்த BOOST.. அடுத்து எத்தனை இடைத்தேர்தல்..? – Calculation-ல் விஜய்.. Confusion-ல் அதிமுக..!!

வெற்றி பயணத்தால் யாருக்கு ஆபத்து..??

தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் மற்றும் பின் தங்கிய பெண்களுக்காக பிங் ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கப்பட்டது. இந்த ஆட்டோவை பெண்கள் மட்டுமே இயக்குவர். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணமாக இது அமையும் என்கிற நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது தவெக அரசு கட்டணமில்லா பேருந்து திட்டங்களை விரிவுபடுத்தி 80 கிமீ க்குள் செல்லும் பேருந்துகளில் பயணிக்கலாம் என்கிற திட்டத்தை அறிமுகம் செய்ததை அடுத்து இதற்கு பல ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், தனியார் பேருந்துகள் என பலரும் தங்களது கண்டனங்களையும் வேதனையும் தெரிவித்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனையும் படியுங்கள் : செங்கோட்டையன் சொன்ன அந்த 15 பேர்..? – கட்டெறும்பாக தேய்கிறதா அதிமுக..!

ஒருபுறம் பெண்களை முன்னேற்ற பிங் ஆட்டோ மறுபுறம் பிங் ஆட்டோ திட்டத்திற்கு வருமானம் இல்லாமல் வைக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டங்களின் விரிவாக்கம் என முதல்வர் விஜயின் செயலால் வருத்தத்தில் உள்ளனர்.

குமுறும் தனியார் பேருந்துகள்

சென்னை போன்ற பெருநகரங்களை தவிர்த்து திருச்சி, தஞ்சாவூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகம். அங்கே அரசு பேருந்துகளை காட்டிலும் தனியார் பேருந்துகளில் தான் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தங்களுக்கு வருமான ஈட்டுவதே பெரும் சவாலாக உள்ளதாக வீடியோ வெளியிட்டு கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்

ஒருபுறம் பிங் ஆட்டோ மற்றும் தனியார் வாகன ஓட்டுநர்கள் என கட்டணமில்லா பேருந்துகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குமுறளை வெளிப்படுத்தி உள்ளனர். அரசின் கவனத்துக்கு இவர்களின் குரல் செல்லுமா? இவர்களையும் உள்ளடக்கிய ஒரு தீர்வினை அரசு முன்னெடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அல்லது இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *