பா*யல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கே தடை விதிப்பதா? – பாடகி சின்மயி சரமாரி கேள்வி!
பா*யல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ஒருவர் தொடர் பா*யல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது தெரிந்தும், அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஒரே காரணத்திற்காகத் தன்னைப் பல ஆண்டுகளாகப் பணியாற்ற முடியாமல் தடை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு எதிராகப் புகார்கள் எழுந்தபோது விசாரணை நடத்தாமல், திரைத்துறையில் உள் புகார்கள் குழுக்களை (ICC) அமைக்காமல் இருந்தவர்கள், தற்போது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் இணக்கமாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
வீரமணி, வைரமுத்து உள்ளிட்டோரைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தன்னைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதற்குப் பதிலாக, தன்னைத் தடை செய்த அமைப்பையும், அதற்குத் துணைநின்றவர்களையும் கேள்வி கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பா*யல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கே தடை விதிக்கப்பட்ட ஒரே நாடு தமிழ்நாடு எனக் குறிப்பிட்டுள்ள சின்மயி, தனக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் குறித்தும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக, முற்போக்கு மற்றும் பெண்ணியம் பேசுபவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். சின்மயியின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
