செய்திகள்

வெற்றி கொடுத்த BOOST.. அடுத்து எத்தனை இடைத்தேர்தல்..? – Calculation-ல் விஜய்.. Confusion-ல் அதிமுக..!!

தாராபுரம் , மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதன் மூலம் புதிய அரசியல் நகர்வுகளுக்காக முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

108 சீட்டுகளுடன் கூட்டணி ஆட்சியை அமைத்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த முதல்வர் விஜயின் 4 மாத ஆட்சியை எடைபோடுவதற்காக குறுகிய காலத்தில் வந்தது தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல். இதுதான் நமக்கு கிடைத்த சரியான நேரம் என எதிர்க்கட்சிகள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டே தேர்தல் வேலைகளில் மும்முரமாக களத்தில் இறங்கின. கடந்த தேர்தலில் 4 முனைப் போட்டி என்றா இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனியாக பிரிந்து புதிய கூட்டணி அமைத்து தனித்து போட்டியிட்டு சர்பிரைஸ் கொடுத்தன.

தவெக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் வெற்றியை கணிப்பதில் ஆரம்பத்தில் அனைவருமே திணறினர் என்றுதான் சொல்லவேண்டும். தவெகவினரே வெற்றியை 100% கணிக்கவில்லை என்றுதான் அரசியல் விமர்ச்சகர்கள் கணித்துள்ளனர். களம் வேறு மாதிரி இருக்கிறது என உளவுத்துறையில் இருந்து கிடைத்த தகவல்களால் பதறிப்போன தவெக தலைமை மிகத் தீவிரமாக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. அதன் வெளிப்பாடுதான் 2 முறை தாராபுரம், 2 முறை மதுராந்தகம் என இதுவரை காணாத சூறாவளி பிரச்சாரத்தை முதல்வர் விஜய் மேற்கொண்டார் என்பதை அனைவருமே ஒப்புக் கொள்வர்.

நாம.. ஜெயிச்சோட்டோம் மாறா..

தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என கடைசிநேர பரபரப்பு வாக்கு எண்ணிக்கை முடிவு வரை நீடித்திருந்தது. ஒருகட்டத்தில் நாங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறோம். 2 மற்றும் 3 ஆம் இடத்திற்குதான் போட்டி என சொல்லும் அளவுக்கு அதிமுகவு, திமுகவும் 2 தொகுதிகளிலும் தடுமாறின.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் கே. மரகதம் குமரவேல், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஐ. பரந்தாமனை விட 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 137 தபால் வாக்குகள் உட்பட 74,048 வாக்குகள் (39.96 சதவீதம்) மரகதம் குமரவே பெற்றிருந்தார்.

இதேபோல தாராபுரம் தொகுதியில் சத்யபாமா 255 தபால் வாக்குகள் உட்பட 66,841 வாக்குகள் (37.02 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றார். த.வெ.க வேட்பாளர் பி. தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை விட 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருவரும் பின்னர் சான்றிதழை பெற்றுக் கொண்டு முதல்வரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். பின்னர் சபாநாயகர் முன்னிலையில் மீண்டும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். இந்த முறை இவர்கள் தவெக எம்.எல்.ஏக்களாக பதவியேற்றதால் தற்போது தவெக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்து எத்தனை இடைத்தேர்தல்..??

6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முதல்வர் விஜய் வெற்றி பெற்ற ஒரு தொகுதி என மொத்த 7 தொகுதிகள் காலியானதாக இருந்த நிலையில் 2 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதால் மீதமுள்ள 5 தொகுதிகளுக்கு அடுத்த இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வெற்றி குறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஆதவ் அர்ஜுனா 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எனச் சொல்லிவிட்டு சாரி, 5 தொகுதிகளுக்கு என மாற்றிப் பேசினார். இது தவிர மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்களது எம்.எல்.ஏக்களும் திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற இரண்டுபேரை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாக பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் வெளியேறுவார்கள்

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் வெளியேறுவார்கள். அதிகமுக தேய்ந்து கட்டெறும்பான கதைதான் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் மேலும் புதிய கிளப்பியுள்ளது. அப்படிப்பார்த்தால் மொத்தமாக 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என பேச்சு அடிபடுகிறது. இது மேலும் பல எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு வருவதற்கான கதவுகளை திறந்து விடும் எனவும் சொல்லப்படுகிறது. எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ரத்து செய்யக்கோரிய வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் இவற்றோடு ஒப்பீடு செய்து பார்த்தால் அடுத்த சில மாதங்களுக்கு தமிழகம் மிகப் பிரமாண்டமான இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது என்பதை தெளிவாக உணர முடியும்.

அதிமுக என்ன ஆகும்..???

தமிழக அரசியலில் கோஷ்டி பூசல் எனும் சொல் ஒன்றும் புதிதல்ல. அதற்கு வித்திட்டதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தான். அதற்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்கிற வீராப்புடன் அதிமுக செயல்படுவதாக தெரிகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் என இருந்த கோஷ்டி பூசல் இன்று சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி என விரிவடைந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். ஜெயலலலிதா கட்டியெழுப்பிய அதிமுக எனும் எஃகு கோட்டயை எடப்பாடி பழனிசாமி எனும் ஒற்றை நபர் பாதுகாப்பாரா? தக்கவைப்பாரா? அல்லது கோட்டை விடுவாரா என தொண்டர்கள் ஏமாற்றத்துடன் பார்த்து வருகின்றனர். இனி அதிமுக என்ன ஆகும்..? செங்கோட்டையன் சொன்னது போல தேய்ந்து கட்டெறும்ம்பு ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

One thought on “வெற்றி கொடுத்த BOOST.. அடுத்து எத்தனை இடைத்தேர்தல்..? – Calculation-ல் விஜய்.. Confusion-ல் அதிமுக..!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *