செய்திகள்

GOLDEN GIRLS! ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணிக்கு தங்கம்!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கபடி அணி மீண்டும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஜப்பானின் டோகாய் நகரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்திய அணி ஈரானை எதிர்கொண்டது. ஆட்டத்தின் இறுதிவரை கடும் போட்டி நிலவிய நிலையில், 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.

போட்டி முழுவதும் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ரெய்டிங் மற்றும் தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் மகளிர் கபடியில் இந்தியா தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துள்ளது.

இந்த வெற்றி மூலம் 2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கையிலும் மேலும் ஒன்று சேர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *