சீமானுக்கு வந்த ‘அதிரடி ஆஃபர்’… ஆதவ் அர்ஜுனா குறித்து பகீர் தகவல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், தமிழக அரசையும் தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்தார். மேலும், விஜய்யுடன் ஒருமுறை காரில் பயணித்தபோது, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைப்பது குறித்து விஜய் தன்னிடம் பேசியதாக சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா தன்னை தொடர்புகொண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாகவும், அதற்கு பதிலாக தனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து அவர் பேசியதாகவும் சீமான் கூறினார்.
இதற்கு தான் ஒத்துழைக்காத நிலையில், தனது மனைவியையும் ஆதவ் அர்ஜுனா தொடர்புகொண்டு, தனக்கு வேளாண்துறை அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாக பேசியதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்து வெளியாகும் பதில் இதுவரை குறிப்பிடப்படவில்லை.
