செய்திகள்

விஜயின் தேர்தல் செலவு ரூ.19.81 கோடி! விமானப் பயணத்துக்கு மட்டும் ரூ.3.55 கோடி

விஜயின் தேர்தல் செலவு ரூ.19.81 கோடி! விமானப் பயணத்துக்கு மட்டும் ரூ.3.55 கோடி

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் செலவுக் கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கின்படி, தவெக மொத்தமாக ரூ.19.81 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கட்சியின் தலைவர் விஜயின் விமானப் பயணத்திற்காக மட்டும் ரூ.3.55 கோடி செலவிடப்பட்டதாக கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரை TAI Jets, Chipsan Aviation மற்றும் Fly High Global Aircraft Management Services ஆகிய நிறுவனங்களுக்கு நான்கு தவணைகளாக இந்தப் பணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ.40 லட்சம் செலவிடப்பட்டதாகவும் கணக்கில் கூறப்பட்டுள்ளது.

தவெகவின் தேர்தல் பிரச்சாரச் செலவில் அதிகபட்சமாக அச்சு, மின்னணு ஊடகம் மற்றும் வானொலி விளம்பரங்களுக்கு ரூ.6.35 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட்ஷோக்களுக்கு ரூ.2.06 கோடியும், விளம்பரப் பொருட்களுக்கு ரூ.40.55 லட்சமும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், Voice of Common Strategic Consulting Private Limited நிறுவனத்திற்கு ரூ.1.79 கோடி வழங்கப்பட்டதாகவும் தேர்தல் செலவுக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் வழியிலான இணையப் பிரச்சாரத்திற்கான தனிப்பட்ட செலவு இந்தக் கணக்கில் காட்டப்படவில்லை

ஒப்பீட்டாக, திமுக தனது தேர்தல் செலவு ரூ.197.84 கோடி என்றும், அதிமுக ரூ.112.39 கோடி என்றும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *