செய்திகள்

“தங்க மோதிரம் போட்டீங்களே.. அது உங்க அப்பா வீட்டு காசா?” விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

“தங்க மோதிரம் போட்டீங்களே.. அது உங்க அப்பா வீட்டு காசா?” விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரசாரம் மேற்கொண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக விஜய் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது கருத்துகளை முன்வைத்தார். அரசுத் திட்டங்களுக்கு மக்கள் பணம்தானே பயன்படுத்தப்படுகிறது என விஜய் கேள்வி எழுப்புவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அதே கேள்வியை ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செயல்படுத்திய விஜய்யிடமே திருப்பிக் கேட்டார்.

“தங்க மோதிரம் போட்டீங்களே… அது என்ன உங்கள் காசா? உங்கள் அப்பா வீட்டு காசா?” என்று விஜய்யை நோக்கி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், அரசுத் திட்டங்களை தலைவர்கள் தங்களது சொந்த பணத்தில் இருந்து செயல்படுத்துவதில்லை என்றும், மக்கள் நலனுக்காக அரசின் நிதி பயன்படுத்தப்படுவது இயல்பான நடைமுறை என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கல்லணை, தஞ்சை பெரிய கோவில், பள்ளிக்கூடங்கள் மற்றும் அணைகள் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் பொதுநலப் பணிகளை குறிப்பிட்டு, அவை தனிநபர்களின் சொந்த பணத்தில் மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல என்ற கருத்தையும் முன்வைத்தார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் திமுக மற்றும் தவெக இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *