ரோகித் வந்தாச்சு… கோலியும் ரெடி! திருவனந்தபுரம் போட்டியில் என்ன ஸ்பெஷல்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கேரளா வந்தடைந்துள்ளார். இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அவர் வந்தடைந்தார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாக செயல்படுகிறார்.
இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். ரோகித்துக்கு முன்னதாக விராட் கோலி நேற்று திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
இதனால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் இணைந்து களமிறங்குவதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே, கிரீன்பீல்டு மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. ரோகித் மற்றும் கோலி இருவரும் விளையாட உள்ளதால், போட்டிக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
