சவரனுக்கு ரூ.1,960 குறைந்தது – தங்கம் வாங்க இதுதான் நேரமா?
சென்னையில் தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.1,960 குறைந்துள்ளது.
இதன்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த விலைக் குறைவு நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மாற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, ஒரே நாளில் அடுத்தடுத்து விலை மாற்றங்கள் அறிவிக்கப்படுவது நகை வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
