செய்திகள்

பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. தாம்பரத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரெயில்!

Good News for Festive Season Travellers.. Special Train from Tambaram to West Bengal!பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. தாம்பரத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரெயில்!

அதன்படி, ரெயில் எண் 06075 தாம்பரம் – சந்திரகாச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும். மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும். மொத்தம் 3 சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல், மறுமார்க்கத்தில் ரெயில் எண் 06076 சந்திரகாச்சி – தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் சந்திரகாச்சியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இந்த சிறப்பு ரெயில் அறிவிப்பு பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 7-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *