தமிழகத்தில் இன்று மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்?
தமிழகத்தில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (அக்டோபர் 5) பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, தருமபுரி, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் இன்று மின்தடையால் பாதிக்கப்பட உள்ளன. பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் அல்லது மாலை வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், சூலூர், தொழிற்பேட்டை, நீலம்பூர், லட்சுமி நகர், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
தருமபுரி மாவட்டத்தில், ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவபாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில், திருமந்துறை, பெருமாத்தூர், வடக்கலூர், அத்தியூர், சின்னார், எறையூர், முருக்கன்குடி, வாலிகண்டபுரம், சர்க்கரை ஆலை பகுதி, பரவை, கீழமாத்தூர், ஓலைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் எரக்குடி, ஆலத்துடையான்பட்டி, பாதர்பேட்டை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டைப்பாளையம், பி.மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில், டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை இருக்கும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கீரமங்கலம் மற்றும் அவணத்தான்கோட்டை பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
சென்னையிலும் இன்று பல பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். நங்கநல்லூர், பழவந்தாங்கல், வேளச்சேரி, ஆதம்பாக்கம், சிட்லபாக்கம், செங்குன்றம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும். பணிகள் முடிந்ததும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
