செய்திகள்

காலாண்டு விடுமுறையில் ஷாக் ரூல்ஸ்! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது!

காலாண்டு விடுமுறையில் ஷாக் ரூல்ஸ்! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது!

காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை முடிந்து, அக்டோபர் 5ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இதனிடையே, காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விடுமுறை காலத்தை கருத்தில் கொண்டு, இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை பள்ளிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *