செய்திகள்

மாத்திரை கவரில் இந்தி.. ஒன்றரை ஆண்டாக பயன்படுத்தியதாக அதிகாரிகள் தகவல் – தற்போது மாற்றம்!

மாத்திரை கவரில் இந்தி.. ஒன்றரை ஆண்டாக பயன்படுத்தியதாக அதிகாரிகள் தகவல் – தற்போது மாற்றம்!

மாத்திரைகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான காலை, மதியம், இரவு உள்ளிட்ட வழிமுறைகள் இந்த கவர்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டிருந்தன. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக இந்தி இடம்பெற்றுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை அதிகாரிகள் வேறு விளக்கம் அளித்துள்ளனர். இந்த மாத்திரை கவர்கள் தற்போது புதிதாக அச்சிடப்பட்டவை அல்ல என்றும், ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக டெண்டர் அடிப்படையில் இதே மாதிரியான கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கோவை மருத்துவமனையில் சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்ட இந்த கவர்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், கரூர் மருத்துவமனைக்கான சில கவர்கள் 2025 டிசம்பரில் முந்தைய ஆட்சிக் காலத்தில் அவசரமாக அச்சிட உத்தரவிடப்பட்டதாகவும், கோவையில் பயன்படுத்தப்பட்ட கவர்களின் வடிவமைப்பு அதற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தி இடம்பெற்ற மாத்திரை கவர்களின் பயன்பாடு கரூர் மற்றும் கோவையில் நிறுத்தப்பட்டுள்ளது. கோவையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் புதிய கவர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *