செய்திகள்

வரும் ஆனா வராது…

வரும் ஆனா வராது...

மச்சி food ஆர்டர் பண்ணலாமா?
ஏன் மச்சி நமக்கு தான் பசிக்கவே இல்லையே….

பசிக்கலைனாலும் ஏதாச்சும் ஆர்டர் பண்ணி சாப்டா தான் mind relaxed-ஆ பீல் ஆகுது….

இன்றைய சூழலில் இதுபோன்று பலர் சொல்லி கேட்க முடிகிறது, இது தற்போதைய genZ தலைமுறையினர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கத்திற்கு பெரிதும் அடிமையாகியுள்ளனர் என்பதை காட்டுகிறது. பசிக்காக உணவு ஆர்டர் செய்த காலம் போய், அதுவே அவர்களின் இயல்பாக மாறிவருகிறது. இதனால் தங்கள் வருமானத்தில் பெருமளவு தொகையை இழந்து வருகின்றனர் இன்றைய தலைமுறையினர்.

இத்தகைய பழக்கத்திலிருந்து இவர்களை மீட்டெடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டதது தான் food never comes செயலி. இந்த செயலியில் நம் மூளைக்கும் கண்களுக்கும் தீனி போடும் வகையில் பல வகையான உணவு பட்டியல் இருக்கும் அதிலிருந்து நாம் மற்ற உணவு டெலிவரி செயலிகளான swiggy, zomoto-வில் உணவு ஆர்டர் செய்வது போல் நமக்கு விருப்பமான உணவுகளை கார்ட்-இல் இணைத்து நமது முகவரியை கொடுத்து ஆர்டர் செய்தால், நமக்கு டெலிவரி மேப், ட்ராக்கிங் id என அனைத்தும் கொடுகப்பட்டு நமது மூளைக்கு நாம் உணவு ஆர்டர் செய்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியை கொடுத்து நம்மை திருப்திப்படுத்தி விடுகிறது.

இதில் ஆர்டர் செய்யும் உணவுகள் நம்மிடம் வந்து சேராது; ஆனால் உணவு ஆர்டர் செய்ய வேண்டும் என்ற நமது மூளையின் வேட்கையை பூர்த்தி செய்து விடுகிறது. இதன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு நாம் எந்த பணமும் கொடுக்க தேவையில்லை என்பதால், இந்த செயலி உணவு டெலிவரி நிறுவனங்களிடம் தனது வருமானத்தை இழக்கும் genZ தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறிவருகிறது.

இந்தமாதிரி பழக்கம் இருக்க நண்பர்கள் உங்களுக்கும் இருக்காங்களா? அவங்க காசையும் மிச்சப்படுத்தி அதுல பங்கு கேளுங்க!

கண்ணுக்கு எட்டுனது வாய்யிக்குத்தான் எட்டல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *