ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில்வேயில் புதிய மாற்றங்கள் !

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில்வேயில் புதிய மாற்றங்கள் !

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் முன்பு 120 நாட்களாக இருந்தது, தற்போது அது 60 நாட்களாக குறைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைத் தடுத்து, உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களின் ஏறும் நிலையத்தை (Boarding station) டிஜிட்டல் முறையில், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புகூட மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் முன்பதிவு செய்த சீட்டை இழக்காமல் அடுத்தடுத்த நிலையங்களில் ஏற முடியும்.

இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் யாரும் அதிக சத்தத்துடன் பேசவோ, பாட்டு கேட்கவோ அல்லது தொலைபேசியில் உரக்கப் பேசவோ கூடாது. நடு பெர்த்தில் படுக்கும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.இரவு 10 மணிக்கு மேல் பெட்டிகளின் பிரதான விளக்குகள் அணைக்கப்பட வேண்டும்; இரவு நேர விளக்குகள் (Night lamps) மட்டுமே அனுமதிக்கப்படும். முன்பதிவு செய்யாத பயணிகள் இரவு நேரங்களில் முன்பதிவு பெட்டிகளுக்குள் நுழையக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *