கல்லூரியில் பேசும்போதே Power Cut – இருளிலும் இடைவிடாது உரையை தொடர்ந்த அமைச்சர்..!
உயர்கல்வித்துறை அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்ப்பட்ட நிலையில் எதையும் பொருட்படுத்தாது அவர் உரையாற்றிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஏற்படும் மின்வெட்டுக்கு எதிராக ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலைகளில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாக உள்ளது.

மின்வெட்டு பிரச்னை உள்ளதை தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமக்களே ஒப்புக்கொண்டு நிலைமையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சமீபகாலமாக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என தொடர்ச்சியாக மின் வெட்டு ஏற்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான பெரும் பேசு பொருளாகவே உள்ளது.
இந்நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், இன்று தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விழா நடைபெறும் மேடை இருளாக இருந்தது. எனினும் அமைச்சர் விஸ்வநாதன் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து உரையாற்றினார்.
மின்வெட்டு ஏற்பட்டபோதும் அவர் பேச்சை நிறுத்தாமல் தொடர்ச்சியாக இருளையும் பொருட்படுத்தாது பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

