செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் ரூ.1.40 கோடி வரை வீட்டுக்கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் ரூ.1.40 கோடி வரை வீட்டுக்கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் வீட்டுக்கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன்களுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ரூ.100 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம். ரூ.100 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.1.40 கோடி வரை கடன் பெற முடியும்.

நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களைப் பொறுத்தவரை, ரூ.100 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகை கொண்ட சங்கங்களில் தனிநபருக்கு ரூ.60 லட்சம் வரையும், ரூ.100 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை கொண்ட சங்கங்களில் ரூ.1 கோடி வரையும் கடன் வழங்கப்படும்.

மேலும், வீட்டுக்கடன் மற்றும் அடமானக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச கால அவகாசம் 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் பெறுபவர்களின் மாதத் தவணைச் சுமையைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதியுள்ளவர்கள் தங்களது அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று மற்றும் வீடு அல்லது நிலம் தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட நகரக் கூட்டுறவு வங்கி அல்லது கடன் சங்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.