செய்திகள்

மாநில உரிமைகள் குழு கலைப்பு – தவெக அரசுக்கு உதயநிதி கடும் கண்டனம்!

மாநில உரிமைகள் குழு கலைப்பு – தவெக அரசுக்கு உதயநிதி கடும் கண்டனம்!

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை தவெக அரசு கலைத்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவைக் கலைத்திருப்பதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

மேலும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவை ரத்து செய்துள்ள அரசு, அதற்குப் பதிலாக மாநில உரிமைகளைப் பாதுகாக்க என்ன திட்டம் வைத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.