செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் குவிந்த காணிக்கை.. 24 நாட்களில் ரூ.1.37 கோடி வசூல்!

திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் குவிந்த காணிக்கை.. 24 நாட்களில் ரூ.1.37 கோடி வசூல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலின் அடிப்படையில் உண்டியலில் ரொக்கம் மட்டுமின்றி தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.

அதன்படி, கடந்த 24 நாட்களில் மட்டும் ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இதுதவிர 419 கிராம் தங்கமும், 5,450 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவதால், உண்டியல் காணிக்கையும் கணிசமாக கிடைத்து வருகிறது. குறிப்பாக கிருத்திகை, விடுமுறை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *