செய்திகள்

இன்டர்நெட் இல்லாமலே ரீசார்ஜ்! Jio, Airtel, Vi யூசர்களுக்கு புதிய வசதி!

இன்டர்நெட் இல்லாமலே ரீசார்ஜ்! Jio, Airtel, Vi யூசர்களுக்கு புதிய வசதி!

இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் செய்யும் முறையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இன்டர்நெட் டேட்டா தேவையில்லாமல், போன் கால் மற்றும் SMS சேவைகளை மட்டும் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய விதிகளின்படி, Jio, Airtel, Vodafone Idea உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா இல்லாத Voice Call மற்றும் SMS மட்டும் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும். இந்த திட்டங்களின் விலை, டேட்டா இணைந்த வழக்கமான திட்டங்களை விட குறைவாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பல திட்டங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் நிலையில், 30 நாட்கள் செல்லுபடியாகும் குறைந்தபட்சம் ஒரு திட்டத்தையாவது நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்யும் வசதி கிடைக்கும். உதாரணமாக, மாதத்தின் 1-ம் தேதி ரீசார்ஜ் செய்தால், அடுத்த மாதமும் 1-ம் தேதியே ரீசார்ஜ் செய்ய முடியும்.

அதேபோல், நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய Voice Call மற்றும் SMS மட்டும் கொண்ட சிறப்பு வவுச்சர்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

தற்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டாவும் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், முதியவர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் Wi-Fi மூலம் மட்டுமே இணையத்தை பயன்படுத்துபவர்கள் பலரும் மொபைலில் கால் மற்றும் SMS சேவைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இதனால், தேவையில்லாத டேட்டாவிற்கும் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டே இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 28 நாட்கள் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களால் ஒரு ஆண்டில் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்வது எளிதாகும்.

இதனால், இன்டர்நெட் டேட்டா தேவையில்லாமல் வெறும் Voice Call மற்றும் SMS சேவைகளை மட்டும் பயன்படுத்த விரும்பும் பயனர்கள், இனி தங்களுக்கு தேவையான திட்டத்தை எளிதாக தேர்வு செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *