செய்திகள்

இந்திய மல்யுத்த வீரர் நிதேஷ் வெள்ளி வென்றார்.. ஆசிய விளையாட்டில் தொடரும் பதக்க வேட்டை!

இந்திய மல்யுத்த வீரர் நிதேஷ் வெள்ளி வென்றார்.. ஆசிய விளையாட்டில் தொடரும் பதக்க வேட்டை!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியாவுக்கு முக்கியமான பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆண்களுக்கான 97 கிலோ கிரேக்கோ-ரோமன் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் நிதேஷ் சிவாச் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் ஜப்பானின் யூரி நகாசாடோவை எதிர்கொண்ட நிதேஷ், 0-4 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இந்தப் பதக்கம் இந்திய மல்யுத்த வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிரேக்கோ-ரோமன் மல்யுத்தத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு 64 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் ஒருவர் முன்னேறிய நிலையில், நிதேஷ் சிவாச் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனிடையே, ஆண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் போட்டியிலும் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. வேலவன் செந்தில்குமார், வீர் சோட்ராணி, அபய் சிங் மற்றும் சூரஜ் குமார் சந்த் ஆகியோர் அடங்கிய இந்திய அணி அரையிறுதியில் மலேசியாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.

மல்யுத்தம் மற்றும் ஸ்குவாஷ் மட்டுமின்றி வில்வித்தை, படகோட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று வருகின்றனர். இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பதக்க வேட்டையில் இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்து வரும் நிலையில், போட்டியின் அடுத்தடுத்த நாட்களிலும் மேலும் பல பதக்கங்களை எதிர்பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *