செய்திகள்

சென்னையில் அனைத்து பூங்காக்களிலும் Sponge Park அமைக்க மாநகராட்சி திட்டம்!

சென்னையில் அனைத்து பூங்காக்களிலும் Sponge Park அமைக்க மாநகராட்சி திட்டம்!

சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் மாநகராட்சி புதிய திட்டத்தை முன்னெடுக்க உள்ளது. இதன்படி, சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் Sponge Park எனப்படும் மழைநீரை உறிஞ்சி சேமிக்கும் வகையிலான பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Sponge Park என்பது மழைநீரை இயற்கையாகவே உறிஞ்சி, மண்ணுக்குள் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் பசுமை பூங்காவாகும். இதில் நீர் ஊடுருவும் நடைபாதைகள், தாழ்வான நீர் சேகரிப்பு பகுதிகள், பசுமையான செடிகள் மற்றும் மரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். இதன் மூலம் மழை பெய்யும்போது சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்குவதைக் கட்டுப்படுத்த முடியும்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போது பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுப்பதற்காக மழைநீர் வடிகால் அமைப்புகள், நீர்நிலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக Sponge Park திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தப் பூங்காக்கள் மழைநீரை நிலத்தடியில் சேமித்து, நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துவதுடன் நகரின் வெப்பத்தையும் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற பசுமை வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.