அரசு அதிகாரிக்கு பா*யல் தொல்லை புகார் – தவெக எம்.எல்.ஏ சிக்கலில்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் பத்மஜாவை எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தகாத முறையில் தொடர்புகொண்டு, ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நவம்பர் 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கலெக்டர் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாக வேண்டியுள்ளது.
