செய்திகள்

பெண் அதிகாரி புகார் – தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது விசாரணைக் குழு அமைத்த தமிழக அரசு!

பெண் அதிகாரி புகார் – தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது விசாரணைக் குழு அமைத்த தமிழக அரசு!

பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் நான்கு பேர் கொண்ட உள் புகார்கள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ். மதுமதி, சட்டத்துறை செயலாளர் பி. சுமதி மற்றும் சமூக ஆர்வலர் சுனிதா ஜோ ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 23ஆம் தேதி பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013-ன் கீழ் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் விசாரணையை கண்காணித்து வருகிறது.