செய்திகள்

கார்த்திகை மகா தீபத்தன்று திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு!

கார்த்திகை மகா தீபத்தன்று திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலையில் இன்று (நவம்பர் 24) கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை உச்சியில் இன்று மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதைக் காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பயணத்திலும், விழா ஏற்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.

எனவே, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் குடை மற்றும் மழைக்கோட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லவும், பயணத்திற்கு முன்பாக வானிலை அறிவிப்புகளை கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.