செய்திகள்

சர்ச்சைக்குரிய MLA-க்கள்.. சாட்டையை சுழற்றும் CM Vijay – என்ன முடிவு எடுக்கப் போகிறார்???

தவெக எம்.எல்.ஏக்கள் சிலர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் நிலையில் இன்று தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் துவங்கியுள்ளது

தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம், மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் தலைமையேற்று முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மூன்று நாளைக்கு இந்த தனியார் விடுதி புக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் காலையில் இருந்தே வரத் தொடங்கியிருந்தனர். எம்எல்ஏக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று தவெக தலைமை கடுமையாக அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது

இதனையும் படியுங்கள் : 6 மாதம்தான் Time.. புன்னகையுடன் மரணத்தை எதிர்கொண்ட பெண் – ராஜஸ்ரீ ஜெய்சன் பற்றிய சிறப்பு தொகுப்பு!

தவெக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள், அவர்களின் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவது, தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் கூட்டம் நடைபெறும் இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.