செய்திகள்

புலிகள் காப்பகத்தில் ரீல்ஸ் விவகாரம்.. அமைச்சர் வன்னி அரசு மீது விசாரணைக்கு உத்தரவு!

புலிகள் காப்பகத்தில் ரீல்ஸ் விவகாரம்.. அமைச்சர் வன்னி அரசு மீது விசாரணைக்கு உத்தரவு!

தமிழக அமைச்சர் வன்னி அரசு, வனப்பகுதியில் புலி மற்றும் யானைகளை நெருங்கிச் சென்றதாக வெளியாகிய வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி, இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். வீடியோவில் காணப்படும் வாகனத்தின் பதிவு எண் தெளிவாக இருப்பதால், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் அமைச்சர் வனவிலங்குகளை நெருங்கிச் செல்வது, புலியை நோக்கி ஓடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், கர்நாடக வனத்துறை அதிகாரிகள் பந்திப்பூர் பகுதியில் விதிமீறல் நடந்ததாகத் தகவல் இல்லை என்றும், சர்ச்சைக்குரிய புலி துரத்தும் காட்சிகள் முதுமலை பகுதியில் பதிவானதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதனால், வீடியோக்கள் எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டன, விதிமீறல் நடந்ததா என்பது குறித்த விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.