இதுதான் அசுத்தமான டெல்லி – இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய 150 சீன Vlogger-கள்..!
சீனாவில் இருந்து 150 Vlogger-கள் வங்கதேசத்தின் பகுதிகளுக்கு சென்று அதனை இந்தியாவின் பகுதி என திட்டமிட்டு பரப்பி வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சில நாட்களுக்கு முன்பு சீனாவின் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அந்த வீடியோவில் தோன்றும் சில Vlogger-கள் நான் நிற்கும் இடம் புதுடெல்லி. இங்கே பாருங்கள் வீடுகள் எவ்வளவு சின்னதாகவும், சுற்றுப்புறம் எவ்வளவு அசுத்தமானதாகவும் இருக்கிறது எனக் குறிப்பிட்டு அதில் பேசியுள்ளனர்

மேலும் தாங்கள் இதனை டெல்லியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த வீடியோக்கள் தான் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச நாட்டில் இயங்கும் தினசரி பத்திரிக்கையான Prothom Alo விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில மாதங்களுக்கு சீனாவிலிருந்து சுமார் 150 Vlogger-கள் தங்கள் நாட்டிற்கு வந்ததாகவும் அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று படம் பிடித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளது.
இதனையும் படியுங்கள் : 450 டன் பட்டாசுக் கழிவுகள்.. ஒரே புகை மூட்டம்.. – சென்னை தீபாவளியின் மற்றொரு முகம்!

இந்தியாவின் நற்பெயரை களங்கப்படுத்த வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள பகுதிகளை படம்பிடித்து அதனை இந்தியப் பகுதிகள் என சீன நாட்டினர் திட்டமிட்டு பரப்புவதின் பின்னணி என்ன? இதற்காக ஏன் 150க்கும் மேற்பட்ட Vloggerகள் வர வேண்டும் என பல கேள்விகளை சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
