செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பதவிக்கு ஐசன்காட்? 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு – நாளை முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேல் பிரதமர் பதவிக்கு ஐசன்காட்? 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு – நாளை முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு விலகும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான காடி ஐசன்காட் (Gadi Eisenkot) அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 67 உறுப்பினர்கள் ஐசன்காட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 46 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பு ஐசன்காட்டுக்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு நவம்பர் 8ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, புதிய அரசை அமைக்க யாருக்கு அழைப்பு விடுப்பது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், 67 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பது மட்டுமே ஐசன்காட் பிரதமராகிவிட்டார் என்று அர்த்தமல்ல. அதிபரின் அழைப்பைப் பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் கூட்டணி அரசை அமைக்க வேண்டும்.

அதிபரால் தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆட்சி அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம். இதனால் இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.