செய்திகள்

மத்திய அரசின் கடன் வரம்பில் விலக்கு கோரிய உத்தரகாண்ட் முதல்வர்!

மத்திய அரசின் கடன் வரம்பில் விலக்கு கோரிய உத்தரகாண்ட் முதல்வர்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் நிதி நெருக்கடி மற்றும் மலைப்பகுதிகளின் புவியியல் சவால்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் வெளிநாட்டு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான (EAP) கடன் வரம்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பு கோரியுள்ளார்.

மேலும், டெல்லி – ஹல்த்வானி இடையே விரைவுச்சாலை அமைத்தல், தனக்பூர் – பாகேஷ்வர் மற்றும் பாகேஷ்வர் – கர்ணபிரயாக் ரயில் திட்டங்கள், ஹரித்வார் – டேராடூன் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

சின்யாலிசௌர் விமான நிலையத்தை விரிவுபடுத்துதல், கிச்சாவில் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கல்வி நிறுவனத்தை அமைத்தல், டேராடூன் ரிங் ரோடு மற்றும் டேராடூன் – முசோரி ரோப் வே திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியை கோரியுள்ளார்.

2027 ஹரித்வார் கும்பமேளாவுக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.500 கோடி நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளுக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாகவும் முதல்வர் கூறியுள்ளார்