செய்திகள்

மதம் மாறியவர்களை BC, MBC பட்டியலில் இருந்து நீக்கக் கோரிக்கை.. டிசம்பர் 18-ல் உயர் நீதிமன்ற விசாரணை!

மதம் மாறியவர்களை BC, MBC பட்டியலில் இருந்து நீக்கக் கோரிக்கை.. டிசம்பர் 18-ல் உயர் நீதிமன்ற விசாரணை!

தமிழகத்தில் மதம் மாறியவர்களுக்கு வழங்கப்படும் BC, MBC இடஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 18-ம் தேதி இறுதி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடிவு செய்துள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரையைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர், BC, MBC மற்றும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மதமாற்றத்தினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கான 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், BC பிரிவுக்கு 26.5 சதவீதமும், MBC மற்றும் சீர்மரபினர் பிரிவுக்கு 20 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் மதம் மாறியவர்களை சேர்த்திருப்பது, உண்மையான பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வாய்ப்புகளை பாதிப்பதாக மனுதாரர் வாதிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி அடங்கிய அமர்வு, இடஒதுக்கீட்டில் ஒரு சமூகத்தை சேர்ப்பதற்கான உரிய தரவுகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான காரணங்கள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை தொடர்பாக முக்கிய முடிவு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.