திருமண வரவேற்புக்கு முன் ஹோட்டலில் உணவருந்திய அனிருத்.. வைரலான வீடியோ!
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், கவ்யா மரனுடனான திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக சென்னையில் தனக்குப் பிடித்த ஹோட்டலில் உணவருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரீஸ் நாட்டில் நவம்பர் 11-ம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து சென்னையில் இன்று நவம்பர் 21-ம் தேதி பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக அனிருத் தனது விருப்பமான சென்னையிலுள்ள ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டுள்ளார். அங்கு அவர் உணவருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமண வரவேற்பில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுவதால், நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
