‘ஹீரோயின் படம் ஓடாது’… என சொன்னவருக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!

ஹீரோயின் படத்தை யார் பார்ப்பாங்க? என்று ஏளனம் செய்தவருக்கு, சமந்தா எப்படி பதிலடி கொடுத்தார் தெரியுமா?

நடிகை சமந்தா நடித்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படம் ரிலீஸ்க்கு முன் நடந்த ஒரு சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தகவலின்படி, ஒரு திரையரங்கின் உரிமையாளரிடம் சமந்தா படம் ஓப்பனிங் எப்படி இருக்கும்? என்று கேட்டபோது,
ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவார்கள்? இப்படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைக்காது என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.


அந்த உரையாடலை சமந்தாவும்தொலைபேசி மூலம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, படம் வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில், சமந்தா தனது சோசியல் மீடியாவில்,
இனி ஹீரோயின் படங்களைப் பற்றி கேட்டால் ‘ஓடாது’ என்று சொல்லாதீர்கள்… ‘பார்க்கலாம்’ என்று சொல்லிப் பழகுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போதுசோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் 100 கோடியைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *