செய்திகள்

15 வயதில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி.. டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை!

15 வயதில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி.. டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை!

இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயதிலேயே புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் கேப்டனாகப் பொறுப்பேற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

2026-ம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் பீகார் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டார். இதையடுத்து நவம்பர் 14ஆம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை அவர் வழிநடத்தினார். அப்போது அவருக்கு வயது 15 ஆண்டுகள் மற்றும் 232 நாட்கள்.

இதன் மூலம் 2025ஆம் ஆண்டு தனது 17 வயது மற்றும் 311 நாட்களில் குரோஷியா அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்ற சாக் வுகுசிக் படைத்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட பீகார் அணியின் 17 பேர் கொண்ட பட்டியலில் வைபவ் கேப்டனாகவும், சூரஜ் காஷ்யப் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய வைபவ், 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்றார். மேலும், தொடரின் சிறந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் கைப்பற்றினார்.

சிறு வயதிலேயே தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷியின் இந்த புதிய மைல்கல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.