செய்திகள்

தனுஷின் ‘OM: Operation Mole’ திரைப்படம்.. நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!

தனுஷின் 'OM: Operation Mole' திரைப்படம்.. நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘O.M: Operation Mole’. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதலில் ‘D55’ என்ற தற்காலிக பெயரில் அறிவிக்கப்பட்ட இப்படத்திற்கு பின்னர் ‘ஓம்’ எனப் பெயரிடப்பட்டது. தற்போது தணிக்கை தொடர்பான காரணங்களால் ‘O.M: Operation Mole’ எனத் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகத்தில் அதிகம் அறியப்படாமல் மக்களுக்காகச் செயல்படும் மறைக்கப்பட்ட கதாநாயகர்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனைக் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் மம்மூட்டி ‘பர்மா’ கார்த்திகேயன் என்ற கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி ஐபிஎஸ் அதிகாரி நித்யா ரெட்டி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஸ்ரீலீலா ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

Wunderbar Films மற்றும் RTake Studios இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.