செய்திகள்

நவம்பர் 18-ல் தவெகவின் 2ஆம் கட்ட கல்வி விருது விழா!

நவம்பர் 18-ல் தவெகவின் 2ஆம் கட்ட கல்வி விருது விழா!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி விருதுகளின் இரண்டாம் கட்ட விழா வரும் நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், தவெக சார்பில் ஆண்டுதோறும் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கல்வி விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த நவம்பர் 4ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 18ஆம் தேதி அதே இடத்தில் நடைபெற உள்ளது. மேலும், மூன்றாம் கட்ட விழா நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 8 கட்டங்களாகவும், ஒவ்வொரு கட்டத்திலும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கவும் தவெக திட்டமிட்டுள்ளது.