செய்திகள்

சென்னையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அந்த வகையில், இன்று (நவம்பர் 16) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்துள்ளது.

சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் (MJDTA) சமீபத்திய விலை அறிவிப்பின்படி, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,00,320 ஆகக் குறைந்துள்ளது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,00,920க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், 18 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.10,265க்கும், 14 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,245க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் சரிவைக் கண்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், நகைகள் வாங்குவதற்கு முன்பாக அன்றைய விலை நிலவரத்தைச் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை:

  • 22 கேரட் தங்கம் – ரூ.12,540 (1 கிராம்)
  • ஒரு சவரன் தங்கம் – ரூ.1,00,320
  • 18 கேரட் தங்கம் – ரூ.10,265 (1 கிராம்)
  • 14 கேரட் தங்கம் – ரூ.8,245 (1 கிராம்)
  • வெள்ளி – ரூ.190 (1 கிராம்)