டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 5ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த அவகாச நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் என மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் நவம்பர் 8ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 4 எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
