அக்னிவீர் 2026 தேர்வு… இறுதிப் பட்டியல் வெளியிடத் தயார்!
இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் இறுதித் தேர்வு பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக எழுத்துத் தேர்வு மற்றும் அடுத்தடுத்த ஆட்சேர்ப்புச் சுற்றுகளில் பங்கேற்றுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.
அக்னிவீர் பொது பணி (GD), தொழில்நுட்பப் பிரிவு, அலுவலக உதவியாளர், 8 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான டிரேட்ஸ்மேன் பணிகள், மகளிர் ராணுவக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும், செபாய் பார்மா மற்றும் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் பணிகளுக்கான தேர்வுப் பட்டியலும் இதில் இடம்பெறலாம்.
இந்தத் தேர்வுக்கான பொது நுழைவுத் தேர்வு (CEE) கடந்த ஜூன் 1 முதல் 16ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதித் தேர்வு, உடல் அளவீட்டுத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட அடுத்தகட்டத் தேர்வுகளில் பங்கேற்றனர்.
இறுதிப் பட்டியல் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் (ARO) மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை.
தேர்வு முடிவுகளை எப்படிப் பார்ப்பது?
- joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- Agniveer Final Merit List 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
- தங்களுக்குரிய மண்டலம் மற்றும் பணிப்பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
- வெளியிடப்பட்ட PDF பட்டியலைத் திறக்க வேண்டும்.
- அதில் தங்களது பதிவு எண் அல்லது பெயரைத் தேடி தேர்வு நிலையை அறிந்துகொள்ளலாம்.
