செய்திகள்

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கிய முதலமைச்சர் விஜய், கேக் பாக்கெட்டுகளில் ‘All is Well’ என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்திருந்தார். இதனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், எல்லாம் நன்றாக இருப்பதாகக் கூறுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, பெரியபாளையத்தில் மாணவி மீது தீ வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணாமல் போன சிறுமியை இதுவரை கண்டுபிடிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆறு மாத கால ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், வீட்டிலும், பள்ளியிலும், சாலையிலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விமர்சித்துள்ளார்.

“முதல்வரின் ஆட்சியில் குற்றவாளிகள் மட்டுமே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.